Palm Jaggery

Palm Jaggery
பனங்கட்டி

In Stock
LKR 1450

Packet

940G

LKR 750

Packet

470G

LKR 400

Packet

235G

  • Description
  • Usage & Ingredients

இதைப் பனைவெல்லம், பனங்கருப்பட்டி எனவும் கூறுவர். பதநீர் சார்ந்த உற்பத்திகளில் பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் உற்பத்தி இதுவாகும்.

பனங்கட்டி என்பது பதநீரில் உள்ள நீரினை ஆவியாக்கி அதன் பிற உள்ளடக்கங்களைச் செறிவடையச் செய்து பாரம்பரியமாக தயாரிக்கப்படுகின்றது.

இதைச் சீனிக்குப் பதில் பாவிக்கும் பழக்கம் உண்டு. ஆயுள் வேத வைத்தியத்தில் தேனுடன் உட்கொள்ளும் மருந்துகளுக்கு தேன் கிடைக்காத போது இதைச் சேர்க்கும்படி வைத்தியர் கூறுவர். சலரோகமுள்ளவர்கள் கூட சிறிது பாவிக்கலாம்.

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டியானது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் பணிபுரிகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிறுவலியை போக்க கருப்பட்டி சாப்பிடலாம்.

பனங்கட்டியில் உற்பத்தியில் பதநீரை வெப்பப்படுத்தி தனியே நீரை ஆவியாக்குவதனால் பனங்கட்டியில் அதிகளவு கனியுப்புக்கள், விற்றமின்கள் மற்றும் பிறநன்மையான கூறுகள் அடங்கி இருக்கும். இதனால் இது மருத்துவ குணங்கள் கொண்டதாகக் காணப்படுகின்றது.

சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபியில் சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் சீனிக்கு மாற்றீடாக இது பயன்படுகிறது . இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.