இந்த இடத்திற்கு வருகை தந்திருக்கும் நண்பர்களுக்கு வணக்கம். எங்களது கதையை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டியிருக்கும் உங்களுக்கு அன்பும் நன்றியும். மகிழ் அங்காடியின் அடிப்படை நோக்கம் என்பது எங்களது கிராமங்கள் தோறும் கிடைக்கும் ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளை, பொருட்களை எல்லோருக்கும் கிடைக்கும் படி வழி செய்வதே ஆகும். சத்துமாவில் தொடங்கிய எங்களது நோக்கம் மேலதிக பொருட்களுடன் இனிதே தொடர்கிறது.

ஒரு ஆரம்ப நிறுவனமாக எங்களுக்கு கோட்பாடுகளும் கனவுகளும் இருக்கின்றன. சிறு தொழில் முயற்சியாளர்களின் முன்னேற்றம், இயற்கை உணவுகள் உற்பத்தி, பாரம்பரிய உணவுகளை மீட்பது என்பது அதில் சில பிரதானமான விடயங்கள். எங்களது உற்பத்திகள் யாவும் யாழ்பாணத்திலேயே மேற்கொள்ளப்படுகிறது.