மகிழ் அங்காடி பொருட்களின் டெலிவரி கட்டணங்கள் மற்றும் இதர விபரம்.
உற்பத்தி மற்றும் விற்பனை
அங்காடியின் உற்பத்திகளை தற்போது நாடுமுழுதும் பெற்றுக்கொள்ள முடியும். துரிதமான டெலிவரி வசதிகள் உள்ளன. கொழும்பு மற்றும் அண்டிய பிரதேசங்களுக்கு சிறிய அளவிலான கட்டணங்களும் வெளி இடங்களுக்கு குறித்த ஒரு கட்டணமும் அறவிடப்படும். எங்களது உற்பத்திகள் யாழ்பாணத்திலேயே நடைபெறுகின்ற போதிலும் எங்களது விற்பனை மையமாக கொழும்பே இருக்கிறது. எனவே கொழும்பு தவிர்ந்த மாவட்டங்கள் வெளி மாவட்டங்களாக கருதப்படும்.
இடங்களும் கட்டண விபரமும்
தெஹிவளை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொல்பிட்டி. கல்கிசை, ரத்மலானை, மொரட்டுவ. கிருலப்பனை, பாமன்கடை, நாராஹென்பிட்டி, நுகேகொடை. அத்திடிய, பெப்பிலியான, கொஹுவல, பொரலஸ்கமுவ. ஆகிய இடங்களுக்கு 100 ரூபாவும்,
மஹரகம, நாவல, பெட்டா, கொட்டஹேன, மட்டக்குளி, வெல்லம்பிட்டிய, மாதம்பிட்டிய மற்றும் கொழும்பிற்கு உட்பட்ட இடங்களுக்கு 200 ரூபாவும், வெளி மாவட்டங்கள் எல்லாவற்றுக்குமே பொதுவான 300 ரூபா கட்டணமும் அறவிடப்படும். வெளிமாவட்டக்களுக்கு 2kg இற்கு அதிகமாகும் போது மேலதிக ஒவ்வொரு கிலோவிற்கும் 100 ரூபாயும் அறவிடப்படும்
டெலிவரிக்கான காலம்
கொழும்பில் இருந்து பொருட்களை பெற்றுக்கொள்பவர்கள் மகிழ் அங்காடியில் ஓர்டரை மேற்கொண்ட அதே நாளிலேயே அல்லது மறு நாள் காலையிலேயே உங்களது பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் ஓர்டரை மேற்கொண்ட சிறிது நேரத்திலேயே எங்களது டெலிவரி பிரிவில் இருந்து உங்களது இலக்கத்திற்கு அழைத்து உங்கள் வசதிப்படி உங்களுக்கான டெலிவரி நேரத்தை குறித்துக்கொள்வார்கள்.
வெளி மாவட்டங்கள் அனைத்திற்கும் நாங்கள் தனியார் டெலிவரி சேவையினையே பயன்படுத்துகிறோம். எனவே நீங்கள் ஓர்டரை மேற்கொண்டு 3-5 நாட்களுக்குள் உங்கள் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
நேரடியாக பொருட்களை பெற்றுக்கொள்ளுதல்
தற்போதைக்கு எங்களது வியாபாரம் இணையம் மூலமாக மட்டுமே நடைபெறுகிறது. எங்களுக்கு எங்குமே கிளைகள் கிடையாது. ஆனால் டெலிவரி கட்டணம் இன்றி எங்களது பொருட்களை நீங்கள் ஓர்டரை மேற்கொண்ட பின்பு நேரடியாக தெஹிவளை ஏரியாவில் பெற்றுக்கொள்ளலாம். பொருட்கள் ஓர்டரை மேற்கொண்ட பின்பு மட்டுமே நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளலாம். எங்களுக்கு காட்சி அறை எங்குமே இல்லை என்பதை மறுபடியும் தெரிவித்துக்கொள்கிறோம்.