
Neem Flower Vadakam
வேப்பம்பூ வடகம்
Packet
100G
- Description
- Usage & Ingredients
வேப்பம்பூ ஆனது நிம்பஸ்டி ரோல் என்ற பொருளை கொண்டுள்ளது,இது மனித உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் ஒன்றை ஒத்து போவதால் இது பசியை தூண்டிடவும், பித்தம் ,வாந்தி, வாதம் சமந்தப்பட்ட நோய்களை குணபடுத்துகிறது. வேப்பம்பூவுடன் மேலும் பல சேர்மானங்களை கலந்து செய்திருக்கும் வடகம் எங்களுடைய தினசரி ஆரோக்கியத்துக்கு முக்கியமான உணவுப் பண்டமாகும்.
வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது.இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாகளைக் கொல்லும் சக்தியை உடையது. வேப்பமரங்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் நோய்கள் இல்லை.மனித உடலில் உண்டாகும் சகல வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ குணத்தைக் கொண்ட சஞ்சீவி மரமாக வேம்பு திகழ்கின்றது. இம்மரத்தில் வேர், பட்டை, மரப்பட்டை ,மரக்கட்டை , வேப்பங் கொட்டையின் மேல் ஓடு ,உள்ளிருக்கும் பருப்பு,வேப்பமரத்து பால் ,வேப்பம் பிசின்,வேப்பங்காய் , வேப்பம் பழம் ,பூ,இலை ,இலையின் ஈர்க்கு ,வேப்பங் கொழுந்து போன்றவை மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளபடியால் அவை அனைத்துமே சித்த , ஆயுர்வேத முறை வைத்தியங்களில் மருந்துப் பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது.