
Masala Powder
சரக்குத் தூள் (மசாலாத்தூள்)
Packet
100G
Packet
250G
- Description
- Usage & Ingredients
ஆதி காலம் தொட்டு பத்திய தூளுக்கு முக்கிய இடம் இருக்கிறது. சரக்கு தூள் அல்லது தற்காலத்தில் மசாலா தூள் என்றும் இதை குறிப்பிடுவர். குழந்தை பிரசவித்த தாய்மார்கள், பூப்படைந்த பெண்கள், சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டவர்களுக்கு பத்திய குழம்பு வைக்க சரக்கு தோலினை பயன்படுத்துவார்கள்.
இது மரக்கறி, மீன், கோழி என எதனுடன் சேர்த்து சமைக்கின்ற போதும் மாறாத சுவையையும் தேக ஆரோக்கியத்தையும் தரவல்லது.
தடிமன், காய்ச்சல், பேதி அருந்திய காலங்களில் கூட இது உடனடியாக கைகொடுக்க கூடிய மருத்துவ உணவு என்றால் மிகையாகாது. நோயுற்ற காலங்களில் மிளகாய்த்தூள் உண்பது உடலுக்கு நல்லதல்ல. எனவேதான் மல்லி, சீரகம், மிளகு சேர்ந்த இந்த தூளினை பாவிப்பதால் உணவு இலகுவாக சமிபாடடையும் எனக் கருதியே இதை நோயுற்ற காலங்களில் பயன்படுத்துகின்றனர்.